×

உடுமலை அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

உடுமலை, மார்ச் 19:உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக அவர் கூட்டணி கட்சியை சேர்ந்த பாமக, பாஜ, தமாகா நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து நேற்று காலை ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் சிவன் கோயிலில் வழிபாடு நடத்திய அவர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். தமிழக அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தபடி உடுமலை தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைத்தார்.

உடுமலை நகராட்சியில் 100 ஆண்டு கால சாதனையாக ரூ.50 கோடி நிதி வழங்கியது. பேருந்து நிலையம் விரிவாக்கம், 24 மணி நேரம் செயல்படும் கால்நடை மருத்துவமனை, ஆர்.டி.ஓ. ஆபிசை தலைமை அலுவலகமாக மாற்றியது, நகராட்சி முழுவதும் சீரான தார் சாலை அமைத்தது, தங்கம்மாள் ஓடை முதல் ராஜ வாய்க்கால் வரை கான்கிரிட் கால்வாய் அமைத்தது, புக்குளத்தில் ஏழை எளியவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுத்தது என தனது தொகுதி அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி வீதி,வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையின்படி இலவச காஸ் சிலிண்டர், மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1500, இலவச வாஷிங் மெஷின் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலைக்கு வாக்களிக்கும்மாறு கேட்டு கொண்டார். அவருடன் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், தமாகா நிர்வாகிகள்  முத்துகுமாரசாமி, பாலகிருஷ்ணன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜோதீஸ்வரி, கந்தசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Tags : Udumalai ,AIADMK ,Minister ,Radhakrishnan ,
× RELATED வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் உடுமலை மத்திய பேருந்து நிலையம்