பல்லடம் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருப்பூர், மார்ச் 19: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியின் பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். அவர் முதற்கட்டமாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்த எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி உள்ளார்.  பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை பல்லடம் பஸ் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை வகித்தார். பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

இதில், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், வி.எம்.சண்முகம, நகர செயலாளர் ராமமூர்த்தி, பாஜ மாவட்ட தலைவர் செந்தில்வேல், சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவப்பிரகாஸ், சுரேந்தர், இலக்கிய அணிச் செயலாளர் சிவாச்சலம், கேத்தனூர் ஹரிகோபால், மகளிரணி செயலாளர் சித்ராதேவி, பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், தண்ணீர் பந்தல் நடராஜன், டெக்ஸ்வெல் முத்துசாமி, கேபிள் சிவா, தர்மலிங்கம், காலனி செல்வராஜ், வக்கீல் சிவசுப்பிரமணியம், கொங்கு ராஜாமணி, கோகுல், ஷாஜகான், அருண்குமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>