×

ஈரோடு கிழக்கு தொகுதி காங். வேட்பாளர் திருமகன் ஈவெரா வேட்பு மனு தாக்கல்

ஈரோடு, மார்ச் 19: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈவெரா நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈபி ரவி, தி.மு.க. கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். வேட்பு மனுதாக்கலின்போது, அபிடவிட்டில் திருமகன் ஈவெரா தெரிவித்துள்ள சொத்துக்களின் விவரம்:  அதில், அவரது பெயரில் ரூ.10லட்சத்து 39ஆயிரத்து 279 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ. 2 கோடியே 30 லட்சத்திற்கு அசையா சொத்தும், ரூ.15 லட்சத்து 38 ஆயிரத்துக்கு கடனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Erode East Block Cong ,Evara ,
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்....