×

திருத்தணி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருத்தணி, மார்ச் 18; அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. திருத்தணி சட்டசபை தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் எம்.பி.,கோ.அரி போட்டியிடுகிறார். இவரின் அறிமுக கூட்டம் மேல்திருத்தணி முருகூர் பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு அ.தி.மு.க., நகர கழக செயலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். இதில், காஞ்சி-திருவள்ளூர் மாவட்ட ஆவின் சேர்மன் கவிச்சந்திரன், பா.ம.க., மாவட்ட செயலர் மணி, பா.ஜ., மாவட்ட செயலர் ஐயப்பன் உள்பட கூட்டணிகட்சி முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்று வேட்பாளர் அரியை அறிமுகம் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் அரி பேசியதாவது: திருத்தணி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகும். என்மீது நம்பிகை வைத்து ஓட்டுப்போட்டால் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வேன்.கடந்த ஆண்டு கொரோனா காலத்தில், முதல்வர் இ.பி.எஸ்., மாவட்டந்தோறும் நேரில் சென்று நலதிட்ட உதவிகள் வழங்கினார். முதல்வர் இ.பி.எஸ்.,அறிவித்த அனைத்து திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார். ஆகையால், மீண்டும் மூன்றாவது முறையாக அ.தி.மு.க., ஆட்சி அமைக்க எனக்கு அதிகளவில் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பங்கேற்ற, 2500க்கும் மேற்பட்ட கட்சி ,கூட்டணி கட்சி தொண்டர் களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

Tags : Thiruthani ,AIADMK ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து