×

அரசு மாதிரி பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி இஸ்ரோ செல்ல தேர்வு

கரூர், மார்ச்18: கரூர் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி இஸ்ரோ செல்ல தேர்வாகியுள்ளார். மாணவிக்கு சிஇஓ வாழ்த்து தெரிவித்தார். கோவை தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, அறிவியல் வினாடி வினா போட்டியை இந்திய விண்வெளி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடத்தினர். இந்த போட்டியை தென்னிந்திய அளவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மத்திய மாநில பாடத்தில் படிக்கும் அரசு பள்ளி, உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 15ஆயிரம் மாணவர்கள் முதற்சுற்று எழுத்துத் தேர்வை எழுதினர்.

இந்த இணையவழி ஆன்லைன் போட்டியை கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் எழுதினர். அரையிறுதிச் சுற்றில் 1000 மாணவர்கள், இறுதிச் சுற்றில் 250 மாணவர்கள் என தேர்வு பெற்று, இறுதியாக இஸ்ரோ செல்லும் 100 மாணவர்கள் தேர்வு பெற்றனர். அந்த பட்டியலில் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சிவரஞ்சனி தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.இஸ்ரோ செல்ல தேர்வான மாணவி சிவரஞ்சனிக்கு விண்வெளி சார்ந்த இணையவழி பயிற்சியை முதுநிலை இயற்பியல் ஆசிரியர் தனபால் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டம் கண்ணமுத்தாம்பட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்த மாணவி சிவரஞ்சனி இஸ்ரோ செல்ல தேர்வாகியிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இஸ்ரோ செல்லவுள்ள மாணவி சிவரஞ்சனி, வழிகாட்டி ஆசிரியர் தனபால் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் உட்பட அனைவரும் நேற்று கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Tags : ISRO ,
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு