×

குளித்தலையில் 28ம் தேதி பங்குனி உத்திரதெப்ப உற்சவம்

குளித்தலை, மார்ச் 18: தினகரன் செய்தி எதிரொலியால் குளித்தலையில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் வரும் 28ம்தேதி நடக்கிறது. இதற்காக தண்ணீர் நிரப்புவதற்கு தெப்பக்குளம் சுத்தம் செய்யப்பட்டு தயார்நிலையில் உள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ரோட்டில் உள்ளது அய்யர்மலை கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தில் ஆண்டாண்டு காலமாக பங்குனி உத்திரத்தன்று அய்யர் மலையில் இருந்து உற்சவர் சாமி குளித்தலைக்கு வரவழைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. பல ஆண்டுகாலமாக இந்த நடைமுறை பின்பற்றாமல் இருந்த நிலையில் பக்தர்கள் உபயதாரர்கள் பெருமுயற்சியால் கடந்த இரண்டு வருடங்களாக தெப்ப உற்சவம் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் ஆழ்குழாயிலிருந்து மோட்டார் மூலம் கொண்டுவரப் பட்டு தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலையில் வைக்கப் பட்டி இருக்கும் .அதில் பங்குனி உத்திரத்தன்று உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும் இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தாக்குதலால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.

அதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த வருடம் பங்குனி உத்திரத்தன்று மீண்டும் தெப்ப உற்சவம் நடைபெற இந்து அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி கடந்த பிப்ரவரி 25ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக குளித்தலை ஆர் எஸ் ரோட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் மார்ச் 28ம் தேதி நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழாக்குழுவினர் அதற்கான ஏற்பாட்டினை செய்து வருகின்றனர்.

Tags : Panguni Uttarateppa festival ,Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...