விராலிமலையில் திமுக செயல்வீரர் கூட்டம் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்பு

விராலிமலை, மார்ச் 18: விராலிமலையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், சத்தியசீலன் , மாரிமுத்து, இளங்குமரன், ஐயப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார்.

இதில் கலந்துகொண்ட முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேசுகையில் அனைத்து வேட்பாளர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் நேரிடையாக தேர்வு செய்தார்.விஜயபாஸ்கரை தோற்கடித்து திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே சுயமரியாதை. கலைஞரை இழிவாக பேசியதற்கு பாடம் புகட்ட வேண்டும். திமுக வேட்பாளர் பழனியப்பன் சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார். லியோனி, கருர் எம்பி ஜோதிமணி உட்பட கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டு பேசினர்.

Related Stories:

>