×

அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்தும் வெற்று அறிவிப்பு திமுக செயல்வீரர் கூட்டத்தில் ரகுபதி பேச்சு

திருமயம். மார்ச்18:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எம்எல்ஏ ரகுபதி தலைமையில் நேற்று திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் சிதம்பரம் வரவேற்றார். கூட்டத்தில் எம்எல்ஏ ரகுபதி பேசுகையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே ஜெராக்ஸ் அடித்து அதிமுக தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டுள்ளது. எனவே நாங்க சொன்ன ரூ.1000 வரும் ஆனா அதிமுக சொன்ன ரூ. 1500 வராது. இதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் மீதான விலை குறைக்கப்படும். ஆனால் பத்து வருடங்களாக ஆளும் அதிமுக அறிக்கையில் உள்ள அனைத்தும் வெற்று அறிவிக்கைகள். மேலும் . அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ததாக கூறி வரும் நிலையில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய தடை வாங்கின அரசுதான் அதிமுக அரசு என்றார்.

கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்புராம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், வர்த்தக அணி மங்கல ராமன், விஜய் ரகுநாதன், லெம்பலகுடி ஊராட்சி கழக செயலாளர் கணேசன், சிறுபான்மை அணி ஜான் பீட்டர், காங்கிரஸ், விசிக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Raghupathi ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...