×

ரங்கம் கோயில் உண்டியலில் ரூ.41 லட்சம், 60 கிராம் தங்கம் காணிக்கை

திருச்சி, மார்ச் 18: கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தளர்ந்து வருகிறது. ஊரடங்கால் கோயில்களும் அடைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வையொட்டி கடந்த ஜூன் 1ம் தேதி கோயில்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரங்கம் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கருட மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் (பொ) அசோக்குமார் முன்னிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி நேற்று எண்ணப்பட்டது. இதில் திருவானைக்காவல் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். ஊழியர்கள் சோப்பால் கை, கால்களை நன்கு கழுவிய பின்னர், கைகளில் சானிடைசர் தெளித்த பின்னர் சமூக இடைவௌியில் உட்கார்ந்து காணிக்கை எண்ணினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 41 லட்சத்து 42 ஆயிரத்து 353 ரொக்கமும், 60 கிராம் தங்கம், 601கிராம் வெள்ளி மற்றும் 8 வெளிநாட்டு கரன்சியும் செலுத்தியிருந்தனர்.

Tags : Aurangam ,
× RELATED ஆனிவார ஆஸ்தான வரவு, செலவு கணக்குகள்...