திருவையாறு அருகே முதல்வரை வரவேற்க வந்த வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

திருவையாறு, மார்ச் 18: திருவையாறு அருகே நேற்று முதல்வரை வரவேற்க வந்த வேன் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் நேற்று காலை பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் முதல்வரை வரவேற்க திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு வாகனங்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர். இதில் திருச்சோற்றுத்துறையிலிருந்து 20 பேரை ஏற்றி வந்த வேன் செங்கமேடு அருகே எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் சாய்ந்தது. இதில் வேனில் இருந்த 20 பேரும் காயமடைந்தனர்.

இதில் திருச்சோற்றுத்துறை மேலத்தெருவை சேர்ந்த கருப்பையா மனைவி ஆயிராசு, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராஜ் மனைவி பாப்பாத்தி, கண்ணன் மனைவி தனம், வரதராசு மனைவி தாமரை செல்வி, சிவபெருமாள் மனைவி மாலதி, வடிவேலு மகன் துரைசாமி, மதியழகன் மனைவி மல்லிகா, பாரதி மனைவி ஜெயந்தி, சுந்தரமூர்த்தி மனைவி ராணி ஆகிய 9 பேர் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுந்தரமூர்த்தி மனைவி ராணிக்கு கையில் முறிவு ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ேபாலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More