×

பாபநாசம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

பாபநாசம், மார்ச் 18: பாபநாசம் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் கோபிநாதன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி வேட்பாளரும், அதிமுக பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளருமான கோபிநாதன் நேற்று பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான மதியழகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பழனிசாமி, அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் சூரியநாராயணன் உடனிருந்தனர்.

Tags : AIADMK ,Papanasam ,
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!