×

மாணவ, மாணவிகள் அச்சம் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் காந்திசிலை சிலை முன் இருந்த கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 18: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி காந்திசிலை முன்பாக நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்சிகளின் கொடிக் கம்பங்கள் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டன.
திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் காந்திசிலை அமைக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி திருக்காட்டுப்பள்ளி-கல்லணை, திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலைகள் இணையுமிடமாகவும் உள்ளது. இப்பகுதியில் எப்போதும் போக்கு வரத்து நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில் காந்தி சிலை முன்புறம் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைத்துள்ளன. அதில் பலர் கொடிகம்பங்களுக்கு இடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான பிளக்ஸ் கட்டிவிடுகின்றனர்.

இதனால் காந்திசிலை இருப்பதே பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இந்நேரத்தில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கொடிக்கம்பங்களை மட்டும் அகற்றி உள்ளனர். கொடிக்கம்பம் நடப்பட்டிருந்த சிமிண்ட் கட்டைகள் அகற்றப்படவில்லை. தேர்தல் முடிந்ததும் மீண்டும் கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுவிடும். காந்தி சிலையும் மறைக்கப்படும்.
எனவே நெடுஞ்சாலை துறையினர் திருக்காட்டுப்பள்ளி காந்திசிலை அருகே நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிகம்பங்கள் நடப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளை இடித்து அகற்றி காந்திசிலை வெளியில் தெரியும்படி செய்ய வேண்டும் என்று கடந்த 15ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.  இதையடுத்து நேற்றுமுன்தினம் தஞ்சை கலெக்டரின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அரசியல் கட்சி கொடிகம்பங்கள் நடப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளையும் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.
இதையடுத்து காந்திசிலை பொதுமக்கள் பார்வைக்கு தெரிகிறது. செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கடைவீதி வணிகர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Gandhi ,Thirukattupalli shopping mall ,
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்