×

கோழி வியாபாரியிடம் ₹1.40 லட்சம் பறிமுதல் கலசபாக்கம் அருகே

கலசபாக்கம், மார்ச் 18: கலசபாக்கம் அருகே கோழி வியாபாரியிடம் ₹1.40 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.கலசபாக்கம் அடுத்த நட்சத்திர கோயில் பகுதியில் தனிப்படை அதிகாரி ஆனந்தன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கோழி வியாபாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அவரிடம் உரிய ஆவணம் இன்றி ₹1.40 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படையினர் தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kalasapakkam ,
× RELATED சாலை வளைவில் கவிழ்ந்த தனியார் பள்ளி...