×

தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடலாம் ஆலோசனை கூட்டத்தில் டிஐஜி காமினி தகவல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலையில்

வேலூர், மார்ச் 18: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப்பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டிஐஜி காமினி தலைமையில் நேற்று நடந்தது. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களின்போது பாதுகாப்புப்பணியில் முன்னாள் படைவீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்படி, ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்க டிஐஜி காமினி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எஸ்பிக்கள் வேலூர் செல்வகுமார், ராணிப்பேட்டை சிவக்குமார், திருப்பத்தூர் விஜயகுமார், திருவண்ணாமலை அரவிந்த் மற்றும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய டிஐஜி காமினி, ‘ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் படைவீரர்கள் முன்வர வேண்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் பல சிறப்புகள் பெற்ற மாவட்டங்களாகும். இம்மாவட்டங்களில் ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்களும் நிறைந்துள்ளனர். இதில் சட்டமன்ற தேர்தலின்போது முன்னாள் படைவீரர்கள் காவல்துறையினருடன் இணைந்து வாக்குச்சாவடிகளில் பணியாற்றும்போது தேர்தல் அமைதியாக நடைபெறும். இப்பணியை ஆற்ற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் தங்களது விருப்பத்தை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களிலும் தெரிவிக்கலாம்’ என்று பேசினார்.

Tags : DIG ,Kamini ,Information ,Vellore ,Randkatta ,Tiruvannamala ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி