×

குளத்தூர் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக விழிப்புணர்வு கபடி போட்டி

குளத்தூர்,மார்ச்18: குளத்தூர் கல்லூரியில் நூறு சதவீத வாக்கு பதிவுக்கான விழிப்புணர்வு கபடி போட்டி நடந்தது.
குளத்தூர் த.மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பொதுமக்களிடையே நூறு சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான கபடி போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் கோபால், முதல்வர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகலாபுரம் நாடார் சங்க செயலாளர் தங்கமணி போட்டிகளை துவக்கிவைத்து பேசினார். தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து வருகிற சட்ட மன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றியும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்லூரி உடற்பயிற்ச்சி இயக்குனர் கருப்பசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.

Tags : Kabaddi ,Kulathur College ,
× RELATED மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி