வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி, மார்ச் 18: வைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்a.எல்.ஏ., வைகுண்டம் யூனியன் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.வைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் எம்.எல்.ஏ., வைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தொகுதியிலுள்ள பொதுமக்கள், ஊர்பெரியவர்கள் மற்றும் வியாபாரிகளை நாள்தோறும் நேரில் சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதன்படி, அவர் நேற்று வைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட  பத்மநாபமங்கலம், இசவன்குளம் பகுதிகளில் தேரதல் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.  

கூட்டுறவு கடன் தள்ளுபடி மூலம் எண்ணற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர், மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500 உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த திட்டங்கள் செயல்படுத்த மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்’ என்றார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர் காசிராஜன், ஊராட்சி செயலாளர் சுப்பையா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். முன்னதாக கருங்குளம் பகுதிக்கு சென்ற வேட்பாளர் சண்முகநாதனை முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தளபதி பிச்சையா உள்ளிட்டவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கு 52பேர் வேட்புமனு தாக்கல்தூத்துக்குடி,மார்ச்18: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாககல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை கோவில்பட்டி தொகுதியில் 6 பேரும், விளாத்திகுளத்தில் 6 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும், வை தொகுதியில் 2 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 5 பேரும் ஆக மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துதிருந்தனர்.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான 4-வது நாளான நேற்று அதிக அளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக. வேட்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ. நேற்று கனிமொழி எம்.பி. முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரான்ஜீத்சிங் கலோனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக ராஜ்மோகன்செல்வின் மனு தாக்கல் செய்தார்.

 அதிமுக. கூட்டணி தமாகா. வேட்பாளர் எஸ்டிஆர்.விஜயசீலன், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக ரீனாசீலன் மனு தாக்கல் செய்தார். மேலும் தூத்துக்குடி தொகுதியில் இந்திய குடியரசு கட்சி(அத்வாலே) வேட்பாளராக சுபாஷ், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ், சுயேச்சை வேட்பாளர்களாக கிராமிய இசைக்கலைஞர் ஜெயலலிதா, வக்கீல் ஆல்டிரின் ஏர்மார்ஷல் தயாராம் ஆகிய 8 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.விளாத்திகுளம் தொகுதியில் திமுக. வேட்பாளர் மார்க்கண்டேயன், திமுக. மாற்று வேட்பாளராக ரெபேக்காள் அனிட்டா, நாம் தமிழர் கட்சி ரமேஷ்குமார் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆனந்தகுமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் சுப்பையாபாண்டியன் ஆகிய 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி, சுயேச்சையாக ரவிசங்கர் ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரும் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஓட்டப்பிடாரத்தில் திமுக. வேட்பாளர் சண்முகையா, திமுக. மாற்று வேட்பாளராக விஜியும், சுயேச்சை வேட்பாளர்களாக கருப்பராஜா, இளம்பிறை மணிமாறன், வேல்முருகன், குணசேகரன், அருண்மாரியப்பன் ஆகிய 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக. வேட்பாளர் கேஆர்எம்.ராதாகிருஷ்ணன், அதிமுக. மாற்று வேட்பாளர் அனிதாவும், திமுக. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க. வேட்பாளர் வடமலை பாண்டியன், நாம் இந்தியர் கட்சி சார்பில்  எக்ஸ்.ரூஸ்வெல்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முருகேசன், குமாரசாமி ஆகிய 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 52 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>