×

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வத்திராயிருப்பு அருகே மாட்டுவண்டி பேரணி

வத்திராயிருப்பு, மார்ச் 18: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வத்திராயிருப்பு பஸ் ஸ்டாண்டில் மாவட்ட கலெக்டர் கண்ணன் முன்னிலையில் கரகாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கும்மிப்பாட்டு, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அத்துடன் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கண்காட்சி, கோலங்கள் வரையப்பட்டிருந்தன. 100 சதவீதம் வாக்களிக்ககோரி மாட்டு வண்டி பேரணியை  கலெக்டர் கண்ணன் துவக்கி வைத்தார். அத்துடன் மாட்டுவண்டியில் பயணம் ெசய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் தனபதி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், அன்பழகன், சிவஅருணாச்சலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், திட்ட ஆணையாளர் திருநாவுக்கரசி, செய்தி மக்கள் தொடர்பு திட்ட அதிகாரி வெற்றி, உதவி அதிகாரி கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cow ,Vatri ,
× RELATED உடையார்பாளையம் அருகே அனுமதியின்றி...