திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசுவிற்கு உற்சாக வரவேற்பு

திருச்சுழி, மார்ச் 18: திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏவிற்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் 5 வது முறையாக தங்கம்தென்னரசும், அதிமுக கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் ராஜசேகரும்,  அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சிவசாமியும் , நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தஜோதி உள்பட ஏராளமானோர் போட்டியிட வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர். திமுக வேட்பாளர் தங்கம்தென்னரசு தொகுதி முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் கிராமங்களில் உள்ள சமுதாயத் தலைவர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். அப்போது, `` 10 ஆண்டுகளாக திமுக எதிர்கட்சியாக இருந்தும், மக்கள் குறைகளை சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மக்கள் தேவைகளை நிவர்த்தி செய்துள்ளீர்கள். மீண்டும் நீங்களே திருச்சுழி தொகுதி எம்எல்ஏ நீங்கள் தான். எனவே, எங்கள் வாக்கு உங்களுக்கு தான்’’ என இன்முகத்துடன் வாழ்த்தி அனுப்புகின்றனர். இதனால் திமுகவினர் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories:

>