×

கடையநல்லூர் அமமுக வேட்பாளர் இன்று வேட்பு மனுதாக்கல்

கடையநல்லூர், மார்ச் 18: கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அய்யாத்துரைபாண்டியன் இன்று (18ம்தேதி) காலை 10.30 மணிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனை முன்னிட்டு கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் தலைமையில் திரண்டு தாலுகா அலுவலகம் ெசன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், ஊராட்சி, கிளை வார்டு செயலாளர்கள், உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பெருந்திரளாக பங்கேற்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Kadayanallur ,AIADMK ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது