×

கடையநல்லூரில் செயல்வீரர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்த்த ஏணி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்

கடையநல்லூர், மார்ச் 18: கடையநல்லூரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை பிரிவு ரசாக், விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, சேக்தாவூது, சுந்தரமகாலிங்கம், பேபி, செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கித்துரை, மார்க்சிஸ்ட் முத்துப்பாண்டி, முஸ்லிம்லீக் செய்யது சுலைமான், விசிக டேனி அருள்சிங், மமக முகம்மது யாகூப், மஜக பீர்மைதீன், பார்வர்டு பிளாக் தங்கபாண்டியன், தமிழ்புலிகள் சந்திரசேகர், ஆதிதமிழர் பேரவை கலிவருணன், தவாக கணேசன் முன்னிலை வகித்தனர். முஸ்லிம்லீக் மாநில அமைப்பாளர் அப்துல்மஜீத் வரவேற்றார். கூட்டத்தில் முஸ்லிம்லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர் பேசியதாவது, திமுகவில் இருந்து கூட்டணி கட்சிகளை பிரிக்க சதி நடந்தது. ஆனால் ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமையும். ஸ்டாலின் முதல்வராவார். தமிழர்களின் தன்மானம் காக்க, தமிழ்மொழி வாழ, தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க  மு.க.ஸ்டாலினை அரியணையில் அமர்த்த எனக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் திமுக நகர செயலாளர் சேகனா, ஒன்றிய செயலாளர்கள் ரவிசங்கர், ராமையா, மாநில மாணவரணி ஷெரீப், அணி அமைப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, வக்கீல் வெங்கடேசன், இசக்கி பாண்டியன், திவான்ஒலி, ஷேக் அப்துல்லா, பூங்கொடி, தமிழ்செல்வி, துணை அமைப்பாளர்கள் காதர் அண்ணாவி, பொரோஸ்கான், இளைஞரணி முத்து, சுபாஷ், அகமது, ராமர், நகர மாணவரணி பெருமாள்துரை, நெடுவயல் தங்கம், காங்கிரஸ் சமுத்திரம், அந்தோணி வியாகப்பன், கார்வின், மதிமுக முருகன், இந்திய கம்யூனிஸ்ட் போஸ், முத்துசாமி, மார்க்சிஸ்ட் கண்ணன், கிருஷ்ணகுமார், முஸ்லிம்லீக் இக்பால். இப்ராகிம், மசூது, செய்துமுகம்மது, முகம்மது கோயா, பாட்டபத்து முகம்மதலி, கடாபி, அபுபக்கர், கருத்தப்பா, சலீம் பஷீர், ஹபிபுல்லா, செய்யது பட்டாணி, டாக்டர் நவாஸ்கான், ரிசவு மைதீன்,செய்யதுஅலி, முகம்மது மீரான், இலியாஸ், ரிசவு பக்கீர்,   விசிக ரமேஷ், மணிபாரதி, ஜான்தாமஸ் பங்கேற்றனர்.


Tags : Kadayanallur ,MK Stalin ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது