×

கடையநல்லூரில் செயல்வீரர்கள் கூட்டம் அதிமுகவினர் தொகுதி வேட்பாளராக மாறி வாக்கு சேகரிக்க வேண்டும் வேட்பாளர் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பேச்சு

செங்கோட்டை, மார்ச் 18: அதிமுகவினர் அந்தந்த தொகுதி வேட்பாளராக மாறி ஓட்டு சேகரித்து மீண்டும் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பேசினார். கடையநல்லூரில் அதிமுக ெசயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், தொகுதி வேட்பாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பேசியதாவது, கடையநல்லூரில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி, எம்.ஜி.ஆர் காலம் முதல் மக்களுக்காக உழைத்து தனது வாழ்வை அர்ப்பணித்து தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவர் எனது தந்தையும், முன்னாள் அமைச்சருமான செந்தூர் பாண்டியன்.கடையநல்லூரில் போட்டியிடும் வேட்பாளர்களில் நான் மட்டுமே, இந்த தொகுதியை பூர்வீகமாக கொண்டவன். தொகுதி மக்களில் ஒருவனாக பணியாற்றிட இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களித்து வாய்ப்பு வழங்கினால் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். கூட்டத்தில் மகளிரணி செயலாளர் விஜிலா சத்தியானந்த், அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், கொள்கை பரப்பு துணைசெயலாளர் பாப்புலர் முத்தையா, முருகேசன், பாஜ மாவட்ட தலைவர் ராமராஜா, பொருளாளர் ராமநாதன், செயலாளர் மாரியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர, ஒன்றிய தலைவர்கள் வேம்புராஜ், சரவணன், ஐயப்பன், சுப்பிரமணியன், தர்மர், தமாகா அய்யாத்துரை பாண்டியன், பாமக மாநில துணைத்தலைவர் ஐயம்பெருமாள் பிள்ளை, மாவட்ட செயலாளர் சீதாராமன், துணைச் செயலாளர்கள் தங்கராஜ், ஆவுடையப்பன், நகர, ஒன்றிய செயலாளர்கள் வேம்புராஜ், விஷ்ணு, அபு, ராமையா, கடையநல்லூர் அதிமுக நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், வசந்தம் முத்துப்பாண்டி, ஜெயகுமார், ராமச்சந்திரன், பேரூர்  செயலாளர்கள் டாக்டர் சுசீகரன், முத்தழகு, முத்துக்குட்டி, பாலசுப்பிரமணியன், அலியார், நல்லமுத்து, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, கடையநல்லூர் கிட்டுராஜா, வடகரை ராமர், விசுவை மாரியப்பன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Kadayanallur ,AIADMK ,Krishnamurali ,A ,Kuttiyappa ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது