நாங்குநேரி பெருமாள் கோயிலில் ரூபி மனோகரன் சிறப்பு பூஜை, வழிபாடு

நெல்லை, மார்ச் 18: நாங்குநேரி பெருமாள் கோயிலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ேசானியா காந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரின் ஆசியோடு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும் நாங்குநேரி ரூபி மனோகரன்  நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி நகர பகுதியில் அமைந்துள்ள வாணமாமலை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபாடு செய்தார்.  நிகழ்ச்சியில் நாங்குநேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர், நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>