மகளிர் தின விழா

காரைக்குடி, மார்ச் 18: காரைக்குடி ராஜராஜன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவி தீபிகா வரவேற்றார். கல்வி குழும ஆலோசகர், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், பெண்கள் அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய பண்புகள் பெண்களின் ஆளுமைத் தன்மையை வளர்க்கும் என்றார்.

டாக்டர் ரதிலாவண்யா பெண்களின் ஆரோக்கியம் குறித்து விளக்கினார். புதுக்கோட்டை கம்பன் கழக இணைச்செயலாளர் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் வாசுகி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். கல்வியியல் கல்லூரி மாணவி மேனகா நன்றி கூறினார்.

Related Stories:

>