×

அரசு பள்ளி மாணவர் சாதனை

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 18:  ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர், கிராமப்புற மாணவர்களுக்கான திறனறிவு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறார்கள். தற்பொழுது நடைபெற்ற இத்தேர்வில் கலந்து கொண்ட பாசித் என்ற மாணவர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவருக்கு உதவித் தொகையாக ரூ.1,500 தமிழக அரசால் நான்கு வருடங்களுக்கு வழங்கப்பட உள்ளது.  தேர்வில் வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி னர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு