×

பரமக்குடி தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

பரமக்குடி, மார்ச் 18:  பரமக்குடி தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர், நேற்று பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருக்கு ஏராளமானவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்பு, பரமக்குடி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்பாளர் சதன் பிரபாகர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர். சதன் பிரபாகருக்கு மாற்று வேட்பாளராக, அவரது தந்தை நிறைகுளத்தான் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் போகலூர் ஒன்றிய செயலாளர் நாகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜேந்திரன் உடன் இருந்தனர். முன்னாள் எம்எல்ஏ முத்தையா, தமாகா எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ராம்பிரபு, பாஜக எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் பாலகணபதி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் கணேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Paramakudi ,
× RELATED சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ...