மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை போராட்டம் நடத்த முடிவு

சாயல்குடி, மார்ச் 18:  கடலாடி தேவர் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலாடி தேவ ர்நகர், சேதுநகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதன் அருகே செல்லும் கோவிலாங்குளம் சாலையோரம் உள்ள தனியார் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகேயுள்ள கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம், அரசு சார்நிலை கருவூலம், அரசு மாணவர் விடுதி, கால்நடை மருத்துவமனை, மின்சார வாரிய அலுவலகம் ஆகியவை உள்ளது. மேலும் மங்களம், பூலித்தேவன் நகர், கண்ணன்புதுவன், காளிகோயில் கொட்டகை, தெற்கு கொட்டகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி கடலாடியோடு ஒட்டியிருப்பதால் டாஸ்மாக் அமைந்துள்ள பகுதியில் செல்லும் சாலையில் பொதுமக்கள் நடந்து வந்து செல்கின்றனர்.

மேலும் கடந்த 1998ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது வீட்டுமனை பட்டா இல்லாத சீர்மரபினர் 25 நபர்களுக்கு காலிமனையிடம் வழங்கப்பட்டது. இங்கு தற்போது பொதுமக்கள் வீடுகளை கட்டி குடியேறி வருகின்றனர். இந்நிலையில் இங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் புதிதாக வீடுகளை கட்டி குடியேற முடியவில்லை. இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. குடியிருப்புவாசிகள், நடந்து செல்லும் மாணவிகள், பெண்களுக்கு திருட்டு பயம், போதிய பாதுகாப்பின்றி அச்சம் இருக்கிறது, எனவே பொதுமக்கள், பெண்கள் நலன் கருதி இக்கடையை அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால் மூடவலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தவும் இப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>