×

மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னம்மாள் ‘தெர்மோகோலுடன்’ வந்து வேட்புமனு

மதுரை, மார்ச் 18: மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னம்மாள் தெர்மாகோலுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   மதுரை மேற்கு தொகுதியின் திமுக வேட்பாளர் சி.சின்னம்மாள் (66). இவர் நேற்று தனது வேட்பு மனுவை விராட்டிபத்தில் உள்ள மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் தாக்கல் செய்தார். பின்பு தேர்தல் உறுதிமொழி எடுத்து கொண்டார். அவருடன் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் குழந்தைவேலு, சிபிஎம் மாநகர செயலாளர் விஜயராஜன் ஆகியோர் இருந்தனர். முன்னதாக சின்னம்மாள் மனு தாக்கல் செய்ய வரும் போது, ரூ.30 லட்சம் மோசடி செய்த செல்லூர் ராஜூவை துரத்தியடிப்போம். கோமாளி ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம் போன்ற வாசகம் எழுதிய தெர்மோகோல் பதாகையை கையில் எடுத்து வந்திருந்தார். வேட்பாளர் சின்னம்மாளுக்கு மாற்று வேட்பாளராக வி.தமிழ்செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளர் சின்னமாள், திமுக மாற்று வேட்பாளர் தமிழ்செல்வி, அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ, மாற்று வேட்பாளர் ஜெயந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றிகுமரன், மாற்று வேட்பாளர் சிவானந்தம், சுயேட்சைகள் மகேஷ்வரன், வெங்கடேசன், அந்தோணிராஜ், செபாஸ்தியன், ஜீவானமூர்த்தி, வி.கே.வெங்கடேஷ்வரன் ஆகிய 12 பேர் இதுவரை மதுரை மேற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Madurai West ,DMK ,Chinnammal ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்