மகளிர் தினம் கொண்டாட்டம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 18: ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் அம்பேத்கர் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலஉரிமைச் சங்கம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு கிளை தலைவர் பட்டாயி தலைமை வகித்தார். செயலாளர் நடராஜ் சங்கத்தின் நோக்கம் பற்றியும், மகளிர் தின மாண்புகள் பற்றியும் கூறினார். விழாவில் மகளிர் தினம், பெண்கள் உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து வழக்கறிஞர் தேன்மொழி, தனமணி ஆகியோர் எடுத்துரைத்தனர். விழாவில் மரக்கன்று நடுதல், விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான கோலப்போட்டி உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் பிரின்ஸ், பலக்கனூத்து கிளைச் சங்க தலைவர் முருகம்மாள் கலந்துகொண்டனர். ஆலோசகர் மாரியம்மாள் விழாவினை தொகுத்து வழங்கினார்.

Related Stories:

>