உலக நுகர்வோர் தினவிழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 18: ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பாக உலக நுகர்வோர் தினவிழா  விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்டத் தலைவர் விஸ்வரத்தினம் தலைமையில் நடைபெற்றது. பிரச்சாரத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி பேருந்து பயணத்தின் போது நுகர்வோர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து அச்சிடப்பட்ட  துண்டுப்பிரசுரம் ஓட்டுநர், நடத்துனர், பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் வேலுசாமி, பொருளாளர் அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் திருமலைசாமி, சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>