×

மு.க.ஸ்டாலின் பிரசார கூட்டம் குஜிலியம்பாறை திமுகவினர் 5,000 பேர் திரளாக பங்கேற்பு

குஜிலியம்பாறை, மார்ச் 18:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் குஜிலியம்பாறை திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஒன்றிய மற்றும் பேரூராட்சி பகுதியில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ,கலந்து கொண்டனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் வருகிற 19ம் தேதியுடன் முடிகிறது. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதி மாலை 5 மணியுடன் முடிக்க வேண்டும். இதனால் தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 18 நாட்களே உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று வடமதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் குஜிலியம்பாறை திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், நிர்வாகிகள் மாரிமுத்து, பொன்சுப்பிரமணி, சவுந்தர்மாரியப்பன், மணிமாறன், தாமரைக்கண்ணன், கருப்பையா, ராமகிருஷ்ணன், சுமதி, செந்தில்குமார், முத்துச்சாமி, சிவபெருமாள், இளங்கோவன், பாலசுப்பிரமணி, செல்வராஜ், ராஜ்குமார், செல்வநாராயணன், சுரேஷ், நயினார்முகமது, மணிவண்ணன், ஹரி உள்ளிட்ட ஒன்றிய மற்றும் பேரூர் திமுகவினர் 5000 பேர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,Kujiliampara DMK ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...