×

குஜிலியம்பாறையில் சுகாதார தன்னார்வலர்களுக்கு கொரோனா முன்தடுப்பு பயிற்சி

குஜிலியம்பாறை, மார்ச் 18: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஓட்டுச் சாவடி மையங்களில் பணியமர்த்தப்பட்ட 216 சுகாதார தன்னார்வலர்களுக்கு கொரோனா முன்தடுப்பு நடவடிக்கை குறித்து பயிற்சி முகாம் நடந்தது. தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் தலா இரண்டு பேர் என சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி, குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள 108 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பரவல் முன்தடுப்பு பணியில் பணியமர்த்தப்பட்ட 216 சுகாதார தன்னார்வலர்களுக்கு கொரோனா முன்தடுப்பு நடவடிக்கை குறித்த பயிற்சி முகாம் குஜிலியம்பாறை சமுதாய கூடத்தில் நடந்தது.

குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். பயிற்சி முகாமில், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு முகக்கவசம் இன்றி வரும் வாக்காளர்களுக்கு முகக்கவசம் கொடுக்க வேண்டும். சமூக இடைவெளியில் நிற்க வைக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என கண்டறிய வேண்டும். ஓட்டு போடும் முன்பாக கைகளில் சானிடைசர் தெளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கொரோனா முன்தடுப்பு நடவடிக்கை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போல் ஆர்.வெள்ளோடு, ஆர்.கோம்பை, டி.கூடலூர் ஆகிய இடங்களில் நடந்தது. இதில் மருத்துவர்கள் ராஜராஜன், பிரகதீஸ்வரர், அகிலேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். வட்டார சுகாதார ஆய்வாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Corona ,Kujilyampara ,
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?