×

சாணார்பட்டி அருகே திமுக செயல்வீரர்கள் கூட்டம் நத்தம் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் பங்கேற்பு


கோபால்பட்டி, மார்ச் 18: திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நத்தம் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் பங்கேற்றார். சாணார்பட்டி அருகே வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நத்தம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் அதிகாரிபட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு  மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் தலைமை வகித்தார். நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் கலந்து கொண்டு, திமுகவின் சாதனைகள் மற்றும் தேர்தல் பணிகள் பேசினார். கூட்டத்தில், கம்பிளியம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள ஆண்டியபட்டி அதிமுக கிளை செயலாளர் சுப்பிரமணி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் ஒன்றிய செயலாளர் மோகன், கம்பிளியம்பட்டி ஊராட்சி செயலாளர் வீராச்சாமி உட்பட ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து தொண்டனர்.

Tags : DMK ,Sanarpatti ,Andiambalam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்