×

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டது

கோவை,மார்ச்.18: சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மட்டும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும்படையினர் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்ற 68 பேரிடம் இருந்து ரூ.85 லட்சத்து 3 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாட்டு மதுவகைகள் உள்பட 5,917 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 25 பேர் தாங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து அவர்களுக்கு ரூ.36 லட்சத்து 19 ஆயிரத்து 860 திருப்பி கொடுக்கப்பட்டது. மீதி பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Flying Corps ,
× RELATED மோடி உருவம் பொறித்த வாழ்த்து அட்டைகள் பறிமுதல்