அழகியமண்டபத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு குமரி மாவட்ட மக்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிப்போம்

குலசேகரம்,மார்ச் 18: திமுக தலைமையிலான  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகம் அழகியமண்டபத்தில்  திறக்கப்பட்டுள்ளது. இதனை குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்  பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளருமான மனோதங்கராஜ் திறந்து வைத்தார். இதில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த், குமரி மேற்கு மாவட்ட  காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் புஷ்பலீலா  ஆல்பன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜாண்பிரைட், ஜாண்சன், அருளானந்த ஜார்ஜ்,  சிற்றார் ரவிசந்திரன், ராஜகோபால், ராஜன், நகர செயலாளர் மணி, காங்கிரஸ்  வட்டார தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்ட்டன் கிளிட்டஸ், ஜாண்கிறிஸ்டோபர், நகர  தலைவர் ஹனு குமார், மாவட்ட துணை தலைவர் ராஜரெத்தினம், விடுதலை சிறுத்தை  மாவட்ட செயலாளர் ஜெயன், முஸ்லிம்லீக் அப்துல்ரசீது, மதிமுக சேம்ராஜ்,  மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜூ, ஜெபா   உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் பேசியது: தமிழகத்தில் 10 ஆண்டுகளாக இருண்ட ஆட்சி நடைபெறுகிறது.  அடிமைகளால் நடத்தப்படும் இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை,  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாய்வு விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும்  கடுமையாக பாதிக்கிறது. இந்த தேர்தலில் நமது கூட்டணி 200 க்கும் அதிகமான  இடங்களில் வெற்றிப் பெற்று தளபதி தலைமையில் நல்லாட்சி ஏற்படும். எனவே நாம்  ஒன்றுபட்டு உழைத்து பெரும் வெற்றியை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மனோதங்கராஜ் எம்எல்ஏ பேசியது: தற்போது நடைபெறும் தேர்தலில் ஊழல், மதவாத கூட்டணியை நாம்  களத்தில் சந்திக்கிறோம். இவர்களை முறியடித்து குமரி மாவட்டம் இந்த  கூட்டணிக்கு எதிரானது என்பதை நிரூபிப்போம். ஓட்டுக்கு பணம் கொடுத்து  சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களை நாம் துரத்தியடிக்க வேண்டும்.  நம் இலக்கு ஒன்றுதான் பன்முக தன்மை கொண்ட நம் நாட்டை ஜாதி, மதம், இனம்,  மொழியால் பிரித்து ஆள நினைப்பவர்களையும், மக்களை அடிமை படுத்த  நினைப்பவர்களையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பாஜ வை நம்பி  ஏமாற்றமடைந்த ஏராளமானோர் இன்று நேரில் சந்தித்து  தங்களின் ஆதரவை  தெரிவித்துள்ளனர். நான் தலைவர்  தளபதியிடம்  உறுதியளித்துள்ளேன்; குமரி  மேற்கு மாவட்டத்திலுள்ள 3 தொகுதிகளிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு  வித்தியாசத்தில் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று, அதை  நாம் ஒன்றுபட்டு உழைத்து நிரூபிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More