வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

நாமக்கல், மார்ச் 18: நாமக்கல் சந்தைபேட்டைப்புதூரை சேர்ந்தவர் அருண்குமார் (36). இவர் நகை பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டி விட்டு மனைவி கோமதியுடன் வெளியூர் சென்றுவிட்டார். மாலையில் வந்த பால்காரர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார்.  இதுகுறித்து அருண்குமாருக்கு தெரிவித்தார். உடனடியாக வீட்டுக்கு வந்த அருண்குமார், பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருட்டு போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அருண்குமார் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த ேபாலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories:

>