காங்கயம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன் மனு தாக்கல்

காங்கயம், மார்ச் 17: காங்கயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் நேற்று காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் இருந்தனர். பின்னர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த மக்களவை தேர்தலில் 39க்கு 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதைபோல, இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்’’ என்றார்.

Related Stories:

More
>