×

சிதிலமான மண்டபத்தை இடித்து அகற்ற வேண்டும்

 

தர்மபுரி, ஆக.1: பழைய தர்மபுரியில், சிதிலமடைந்து காணப்படும் 70 ஆண்டு பழமையான பஜனை மண்டபத்தை இடித்து அகற்றி விட்டு, மாற்று இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி தாலுகா, பழைய தர்மபுரியில் சக்தி மாரியம்மன் கோயிலின் முன்பு, பழனி ஆண்டவர் கோயில் பஜனை மண்டபம் 1957ம் ஆண்டு கட்டப்பட்டது. மார்கழி மாதங்களில் தெருக்களில் பஜனை பாடி வந்து, இந்த பஜனை மண்டபத்தில் சொற்பொழிவு நடக்கும். சில ஆண்டுகளாக இந்த பஜனை மண்டபம் முறையாக பராமரிப்பு இல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கனமழை பெய்தால், சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், இந்த சுவற்றில் அரசமரம் ஆள் உயரத்திற்கு வளர்ந்துள்ளது. இந்த மண்டபத்தின் முன்புள்ள சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா, வரும் 11ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அதற்குள் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, மாற்று இடத்தில் பஜனை மண்டபம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dharmapuri ,Bhajan Mandapa ,Old Dharmapuri ,Sakthi Mariamman Temple ,Dharmapuri Taluka… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...