×

காயல்பட்டினத்தில் கூட்டணி கட்சி கூட்டம் சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கும் வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

ஆறுமுகநேரி, மார்ச் 17: சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கும் என்று காயல்பட்டினத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். காயல்பட்டினத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் என்னை பொறுத்தவரை ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன் என திமுக வேட்பாளர் அனிதா
ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். காயல்பட்டினத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. நகர திமுக அவைத்தலைவர் முகம்மது மெய்தீன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முத்துமுகம்மது வரவேற்றார்.

மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஐ.காதர், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், ஷாஜகான், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகமதுல்ஹசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னீர்செல்வம், மதிமுக காயல் அமானுலல்லா, தவாக மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், மனித நேய மக்கள் கட்சி பொறுப்பாளர் ஜாஹீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியதாவது, ‘காயல்பட்டினம் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, மருத்துவமனை என அனைத்தையும் செய்து கொடுத்துள்ளேன். என்னை பொறுத்தவரை ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். பல்வேறு கூட்டணி கட்சிகள் இருந்தாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வகையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் செயல்பட்டு வருகிறது. மத்தியில் உள்ள பாஜக அரசு என்னென்ன சட்டங்களையெல்லாம் நிறைவேற்றி சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்த முடியுமோ, அந்த வகையில் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இருந்தாலும் இதனை எதிர்க்கின்ற ஒரே தலைவராக தலைவர் ஸ்டாலின் மட்டுமே உள்ளார். சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கிறது. இதனால் தான் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வகையில் பாஜக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து தலைவர் ஸ்டாலினையும், திமுகவையும் காக்கவேண்டிய கடமை சிறுபான்மையினராகிய உங்களிடம் உள்ளது. ஊழலுக்கு என்றே ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி மட்டும் தான். அந்த ஊழல் ஆட்சியை மத்தியில் உள்ள மோடி ஆட்சி காப்பாற்றி வருகிறது. தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். காயல்பட்டினத்தில் உள்ள யு.எஸ்.சி, கே.எஸ்.சி ஆகிய இரு மைதானத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று தருவேன். காயல்பட்டினத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவாக இருந்தாலும் ஸ்டாலின் முதல்வராக கையெழுத்திட்டவுடன் அவரிடம் தெரிவித்து உடனடியாக பெற்றுத்தருவேன். மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளராக எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ. ஜெகன், அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முகைதீன்பிச்சை, அப்துல்காதர், இலக்கிய அணி ராஜபாண்டியன், கல்லூர் ரஹ்மான், மாவட்ட வர்த்தகஅணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, ஓடைசுகு, துணை செயலாளர்கள் லேண்ட்மம்மி, கதிரவன், காங். விவசாய அணி அமைப்பாளர் வேல்ராமகிருஷ்ணன், காங். முத்துவாப்பா, ஜமால், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மன்னர் பாதுல் அஸ்ஹப், முகம்மது அலி ஜின்னா, விடுதலை சிறுத்தை கட்சி விடுதலை செழியன், குட்டி, தவாக ராஸிக்முசம்பில், திமுக முன்னாள் நகர செயலாளர் ஜெய்னுத்தீன், ஆறுமுகநேரி நகர காங். தலைவர் ராஜாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Gayalpattinam ,Anita Radhakrishnan ,DMK ,
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...