×

கிராமங்களில் அடிப்படை வசதி குளத்தூரில் கனிமொழி எம்பி பேச்சு

குளத்தூர்,மார்ச் 17: திமுக ஆட்சிக்கு வந்ததும் கிராமங்களில் அடிப்படை வசதி நிறைவேற்றப்படும் என குளத்தூர் பகுதி பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசினார்.  விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து கனிமொழி எம்பி குளத்தூர், வேப்பலோடை, பட்டினமருதூர் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் வந்ததும் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி ஆசை விடாமல் வாக்குறுதி என்ற பெயரில் பொய்களை கூறி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். இத்தனை வருடம் ஆட்சியில் இருந்தபோது சிலிண்டர் விலையை கூட குறைக்காத பழனிசாமி வெற்றி பெற்றதும் வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம் என பெண்களை ஏமாற்றுகிறார்.

 முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை முழுமையாக கிடைக்க பெறாமல் உள்ள நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கைகளை அப்படியே காப்பியடித்து அள்ளி விடுகிறார். பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சியில் எப்படி சாமானிய பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். கொரோனா நோயை வைத்து கொள்ளையடித்த கொடூர ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அவலநிலையை போக்க திமுகவுக்கு நீங்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கிராமப்புற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக வேலை நூறு நாளிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட்டு ரூ.300 சம்பளமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை திமுக அரசு ஏற்படுத்தி தரும். இவ்வாறு அவர் பேசினார். உடன் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Kanimozhi ,Kulathur ,
× RELATED வேம்பாரில் உதயசூரியன் சின்னத்திற்கு...