தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி

தூத்துக்குடி,மார்ச்17:  தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு  இன்று முதற்கட்ட பயிற்சி நடக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல்  ஏப்.6ம் தேதி நடக்கிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில்  6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக மொத்தம் 12 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள வாக்குசாவடி அலுவலர்களுக்கு வாக்கு பதிவின்போது வாக்குசாவடியில் மின்னனு வாக்குபதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் இயந்திரம் ஆகியவற்றை எப்படி தயார் நிலையில் வைப்பது, வாக்குப்பதிவின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், வாக்களிக்கம் பொதுமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது குறித்தும் 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி இன்று (17ம்தேதி) நடக்கிறது.   

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி, வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, எட்டயபுரம் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஆகிய 6 இடங்களில் பயிற்சி நடக்கிறது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஒவ்வொரு அறையிலும் 40 பேர் மட்டும் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம், சானிடைசர் ஆகியவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories:

>