புதுச்சேரி, ஜூலை 31: புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தானி வீதியில் ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசார் வருவதை கண்ட ஆசாமி, அங்கிருந்த பைக்கில் தப்பி செல்ல முயன்றபோது, அவரை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், புது சாரம் பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார்(21) என தெரிந்தது. அவரை சோதனை செய்தபோது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்துபோது பணத்துக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிந்து பிரசன்னகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சா, பைக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
