×

காரிமங்கலத்தில் குடிநீர் குழாய் பணிக்கு தோண்டிய குழி சீரமைப்பு

காரிமங்கலம் மார்ச் 17: காரிமங்கலம் பேரூராட்சியில் குடிநீர் குழாயில் வால்வு பொருத்துவதற்காக தோண்டப்பட்ட குழி நேற்று மூடப்பட்டது. காரிமங்கலம் பஜார் வீதி குறுகலாக இருப்பதால், எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த சாலையில் பதிக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய்க்கு புதிய வால்வு பொருத்துவதற்காக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மூன்று அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. குழி தோண்டி ஒரு மாதத்திற்கு மேலாகியும், வால்வு பொருத்தாமல் குழியை அப்படியே விட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் குழி தோண்டப்பட்டுள்ளதால், டூவீலரில் வருபவர்கள் நிலைதடுமாறி விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் குடிநீர் குழாயின் வால்வு பொருத்த தோண்டப்பட்ட குழி மூடப்பட்டது.

Tags : Karimangalam ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்