×

பெரும்புதூர் பேரூராட்சி கண்டு கொள்ளாததால் பழுதடைந்து கிடக்கும் கட்டண கழிப்பறை: துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு

பெரும்புதூர், மார்ச் 17: பெரும்புதூர் பஸ் நிலையத்தில் பழுதடைந்து காணப்படும் கட்டண கழிப்பறையை, பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் மைய பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கபடுகின்றன. வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயனிகள், இந்த பஸ் நிலையம் வருகின்றனர். மேலும் பெரும்புதூர் பகுதியில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு, ஆதார் அட்டை வழங்கல் பிரிவு, காவல் நிலையம், பள்ளி, கல்லூரி, வங்கிகள் உள்பட அரசு, பொது மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் இயங்குகின்றன.

மேற்கண்ட அலுவலகங்களுக்கு பெரும்புதூர் பஸ் நிலையத்தில், கதவுகள் உடைந்து காணப்படும் கட்டண கழிப்பறை.பெரும்புதூர் ஒன்றியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்புதூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். பெரும்புதூர் பஸ் நிலையம் வந்து செல்லும் பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க, பஸ் நிலைய வளாகத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கட்டண கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை பெரும்புதூர் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் பணியாற்றுவோர் பயன்படுத்துகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், கழிப்பறை பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த கழிப்பறை கதவுகள், பீங்கான்கள் உடைந்து காணப்படுகின்றன. அங்குள்ள குழாய் உடைந்து, அதில் தண்ணீர் வீணாகிறது. மேலும் கழிப்பறை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், அலட்சிய போக்குடன் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால், பயணிகள், பொது கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Tags : Municipality ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு