×

காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நீச்சல் குளம் பயன்பாட்டுக்கு விதிமுறைகளுடன் அனுமதி

காஞ்சிபுரம், மார்ச் 17: காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டரங்கில் மீண்டும் நீச்சல் குளத்தில் விதிமுறைகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மற்றும் போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் விளையாட்டரங்கம் நீச்சல் குளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மற்றும் போட்டிகள் நடத்துவதற்கும் விதிமுறைகளுடன், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது, நீச்சல் குள வளாகத்தில் சமூக இடைடிவளியுடன் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், நீச்சல் குளத்தில் உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சளி, காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் நீச்சல் குளத்துக்கு நுழைய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோயாளிகள் நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதியில்லை. மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கம், காஞ்சிபுரம் (7401703481) என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram Anna Arena ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் தயார்...