×

டிடிவி பிரசார கூட்டத்தை தேமுதிக புறக்கணிப்பு

சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் அமமுக சார்பில் சவுந்தரபாண்டியன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் நேற்று மாலை தேரடி சந்திப்பில் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, அண்ணன் பழனிசாமி எத்தனை வருடம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டு இப்போது 1500 ரூபாய் பணம் தருகிறேன் என்று கூறுகிறார். ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை. சிலிண்டர் இலவசமாக தருகிறேன் என்கிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியோடு கூட்டணியில் உள்ளனர். டீசல், பெட்ரோல் விலை குறைத்து இருக்கலாம். எதையும் செய்யவில்லை, என்றார். பிரசார கூட்டத்திற்கு தேமுதிக தொகுதி பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் 200 பேர் வந்திருந்தனர். ஆனால் அவர்களின் கட்சி கொடி வைக்காததால் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து சென்றனர்.

Tags : Temujin ,DTV ,
× RELATED பாஜவுடனான கூட்டணியால் எடப்பாடிக்கு அச்சம்: டிடிவி தினகரன் பேட்டி