×

பாசிசத்தை எதிர்த்து போராடும் திமுக கூட்டணிக்கே ஆதரவு: 16 அமைப்புகள் தீர்மானம்

திருச்சி, மார்ச் 17: தமிழக மக்கள் முன்னணி, தமிழத் தேச நடுவம், திருச்சிராப்பள்ளி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி உள்பட 16 அமைப்புகளின் சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. தமிழக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பொழிலன், கண குறிஞ்சி, பாவேந்தன், நீரோடை நிலவன் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பார்ப்பனிய பாசிச வெறியை வீழ்த்துவதற்கான வழித்தடத்தில் அரசின் நீதித்துறை, நிர்வாகத்துறை என பல்வேறு அரங்குகளின் முன்னணியும் அதன் உறுப்பியக்தினரும் அவற்றை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கின்றனரோ அவ்வாறே தேர்தல் களத்தையும் போராட்ட இயக்கக் களமாக பயன்படுத்த வேண்டும். தமிழகம் மட்டுமன்றி மொழித் தேச மாநில அடையாளங்களையும், அவற்றின் உரிமைகளையும் பறித்து நசுக்குவதோடு, மொழி மாநிலங்களின் விளைச்சல், உழைப்பு வழி வருவாய்கள், கனிமவளங்களை சூறையாடியும் பாசிச வெளியோடும் பாஜாக அரசு செயல்படுகிறது.

மொழி மாநில உரிமைகளை நசுக்குிறது. இதுபோன்ற எண்ணற்ற வகையில் இந்திய பார்ப்பனிய அதிகார வெறிப்பிடித்து ஆட்டமிடும் பாஜக தமிழர்களின் இன்றைய முதல் எதிரி. எனவே நம் தமிழ் தேச உரிமைப் போராட்டங்களில் முழுமையான செயல்பாடுகள் கொண்டனவாக இல்லை என்றாலும், திமுக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், தமிழக வாழ்வுரிமைக்கட்சி, கொ.ம.தே.க, ஆதிதமிழர் பேரவை, மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் விடுதலை கட்சி, பார்வேர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் ஓரளவேனும் பாசிச பாஜக போக்குளை எதிர்த்து வருவதால், அவற்றுக்கு ஆதரவு தெரிவித்து, அவற்றை வலுப்படுத்த வேண்டிய தேவையின் வழியாக இருக்கக்கூடிய பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு