மேற்கு தொகுதியில் வாக்கிங் சென்றவர்களிடம் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 17: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு, வெஸ்ட்ரி பள்ளி மைதானம் மற்றும் கோர்ட் பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். வேட்பாளர் கே.என்.நேருவுடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.

Related Stories:

>