வாகன சோதனையில் 78 மதுபான பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது

முத்துப்பேட்டை, மார்ச்17: முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த மன்னார்குடி துணை தாசில்தார் ஜோதிபாசு வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பட்டுக்கோட்டை சாலையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த ஒரு பைக்கை சோதனை செய்தபோது அதில் 78 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நபர் முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் அவர், முத்துப்பேட்டை அருகே பேட்டை கிராமத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி(60) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>