×

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

 

வானூர், ஜூலை 30: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள அச்சரம்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரதமனதிவாரி (65). இவர் வேலை சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் கடந்த 22ம் தேதியன்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் உடைக்கப்பட்டு, கதவு திறந்திருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21.5 பவுன் நகை, 908 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் அவர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட வீட்டில் மூன்று நபர்கள் உள்ளே புகுந்து 21 1/2 பவுன் நகைகள் வெள்ளி பொருட்கள் 908 கிராம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.25லட்சமாகும். ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேற்று ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களை தேடி வருகிறனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : VANUR ,VENKATEESWARA NAGAR ,VANUR TALUKA CHURCHITRAMBALAM ,GOOTROD ,Bangalore ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...