திருவையாறு சட்ட மன்ற தொகுதிக்கு 5 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவையாறு, மார்ச் 17: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு கடந்த 13ம் தேதியில் முதல் வேட்புமனுதாக்கல் நடந்து வருகின்றது. இதில் முதல்நாள் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு வேட்புமனு யாரும் தாக்கல் செய்யவில்லை .நேற்று முன்தினம் 15ம் தேதி பாஜ ,திமுக, அமமுக கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று 16ம் தேதி பாஜ கட்சியின் மாற்று வேட்பாளராக பூண்டி ராஜசுந்தர் ( 32) மற்றும் அமமுக மாற்று வேட்பாளராக வேலு கார்த்திகேயன் மனைவி கண்ணகி (44 )ஆகிய இருவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 5 பேர் திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் நடந்துள்ளது.

Related Stories:

More